அன்று எதற்காக தோனி என்னை முன்னதாக களமிறங்க சொன்னார் என்பதை தெரிந்து கொள்ளும் ஆர்வம் இருந்தது. அதனால் ஆட்டம் முடிந்ததும் அவரிடமே கேட்டேன். வழக்கமாக கேட்கமாட்டேன். ஆனால் அன்று அவர் மனதில் என்ன இருந்தது என தெரிந்து கொள்ள ஆசைப்பட்டேன். அதற்கு அவர், `நீ லெக்-ஸ்பின்னர்களுக்கு எதிராக நன்றாக விளையாடுவாய் அப்போது அங்கு அவர்கள் தான் பந்து வீசிக் கொண்டு இருந்தார்கள். அதனால் தான் உன்னை போக சொன்னேன்’ என்றார். மேலும் நானும் சிறப்பாக விளையாடியதாக சொன்னார்” என அந்த நினைவுகளை பகிர்ந்தார்.

அந்த தொடரில் பாகிஸ்தானின் லெக் ஸ்பின்னர் யாசிர் ஷா சிறப்பாக விளையாடி எதிரணிக்கு நெருக்கடி அளித்து வந்தார். அதனை சமாளிக்க ரெய்னாவை முன்னதாக தோனி களமிறக்கினார். யாசிர் அந்த போட்டியில் 8 ஓவர்களுக்கு 60 ரன்கள் விட்டுக்கொடுத்ததோடு விக்கெட் எதுவும் வீழ்த்தவில்லை.

ரெய்னா, தோனி

தொடர்ந்து தோனி குறித்து பேசிய ரெய்னா, “எல்லா ஆட்டத்திலும் அவர் ஒரு ஸ்டெப் முன்னாடி தான் இருப்பார். ஸ்டெம்புக்கு பின்னால் நிற்பதால் அவருக்கு பிட்சின் தன்மை குறித்து நன்றாக அறிந்து வைத்திருப்பார். ஐ.பி.எல் தொடரில் நான் குஜராத் அணிக்கு கேப்டனான போது, `என்னிடம் எப்போதும் போல் யோசனைகள் கேட்கலாம்’ என்றார். அவர் கடவுளின் கிப்ட் என்று தான் நான் சொல்லுவேன்” என்றார் நெழ்ச்சியுடன்!