கொரோனா வைரஸைத் தடுக்க கிருமி நாசினிகளை வழக்கத்தைவிட அதிகமாக பொதுமக்கள் பயன்படுத்திவருகின்றனர். அதனால் பிரபலமான கிருமி நாசினிகளின் தேவை அதிகரித்தது. அதனால் சம்பந்தப்பட்ட கம்பெனிகள் கூடுதல் உற்பத்திகள் மூலம் தேவைக்கு ஏற்ப சப்ளை செய்துவந்தன. ஆனால், சென்னையில் மட்டும் கிருமி நாசினிகளுக்கான ஆர்டர்கள் குறிப்பிடும் வகையில் இல்லை. அதனால் சந்தேகமடைந்த பிரபலமான கிருமி நாசினிகளின் கம்பெனி தரப்பில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

கடைகளில் தங்களின் கிருமி நாசினிப் பொருள்களை ஆய்வு செய்தனர். அப்போது அந்தக் கம்பெனி நிர்வாகிகளுக்கு அதிர்ச்சி காத்திருந்தது. ஏனெனில், தங்களின் தயாரிப்பைப் போலவே போலி கிருமிநாசினிகள் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்தன.

பறிமுதல் செய்யப்பட்ட போலி தயாரிப்புகள்

இதையடுத்து, சென்னை அறிவுசார் சொத்துரிமை அமலாக்கப்பிரிவில் சம்பந்தப்பட்ட கிருமி நாசினிகளின் கம்பெனி தரப்பில் புகாரளிக்கப்பட்டது. அந்தப் பிரிவின் ஏ.டி.ஜி.பி ஷகில் அக்தர் அறிவுரைப்படி எஸ்.பி ராமர் உத்தரவின்பேரில் சப்-இன்ஸ்பெக்டர்கள் கார்த்திக், சலைஸ்மேரி, ராஜகோபால் தலைமைக் காவலர்கள் சிவகாமி, பிச்சமுத்து ஆகியோர் கொண்ட தனிப்படை அமைக்கப்பட்டது.