கொரோனா வைரஸ்

இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1.25 லட்சத்தை கடந்திருக்கிறது. கடந்த 24 மணி நேரத்தில் இதுவரை இல்லாத அளவில் 6,654 பேர் புதிதாக கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 137 பேர் கொரோனா காரணமாக பலியாகியுள்ளனர். இதன் மூலம் இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,25,101 ஆக அதிகரித்திருக்கிறது. கொரோனாவால் பலியானவர்களின் எண்ணிக்கை 3,720 ஆக உள்ளது.