இது தொடர்பாக போலீஸார் கூறும்போது, “போலி இ-பாஸ் அடித்து பயணித்துள்ளனர். இரண்டு பேருந்துகளையும் பறிமுதல் செய்துள்ளோம். பேருந்தில் இருந்த 30 பயணிகள், கொரோனா பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டனர். பின்னர், தனிமைப்படுத்தல் முகாமுக்கு அனுப்பப்பட்டனர். பேருந்தின் உரிமையாளர் சண்முகநாதன், மேலாளர் செந்தில்குமரன், டிரைவர்கள் ராமையா, பிச்சைமணி ஆகிய நால்வரை கைது செய்துள்ளோம். ஏற்கெனவே இதுபோன்ற ஒரு மோசடியில் ஈடுபட்டு மகாராஷ்டிரா டு தேனி வந்திருப்பதாக தெரியவந்துள்ளது. அது தொடர்பாக விசாரணை நடக்கிறது” என்றனர்.

பறிமுதல் செய்யப்பட்ட ஆம்னி பேருந்துகள்

வெளி மாநிலங்களில் இருந்து வருபவர்களால்தான் தேனியில் நாளுக்கு நாள் கொரோனா அதிகரித்துவருகிறது. இந்த நிலையில், முறைகேடாக, போலி இ-பாஸ் மூலம் வெளிமாநிலங்களில் இருந்து ஆட்களை ஏற்றிவந்து தேனியில் இறக்கி விடும் கும்பல் தற்போது கைதாகியிருப்பது குறிப்பிடத்தக்கது.