கண்ணுக்கு எட்டிய தூரம் வரை வெறும் நெருப்பு மட்டுமே தெரிந்தது. பின்னர் எனக்கு ஓர் இடத்திலிருந்து வெளிச்சம் வந்தது. அதைப் பின்பற்றி ஓடி நான் அந்த வெளிச்சத்திலிருந்து குதித்து கீழே விழுந்துவிட்டேன். பிறகுதான் நான் விமானத்திலிருந்து 10 அடி கீழே குதித்தது தெரிந்தது. பின்னர் மீண்டும் மயக்க நிலைக்குச் சென்றுவிட்டேன், கண் விழிக்கும்போது மருத்துவமனையிலிருந்தேன்” என்று கூறியுள்ளார்.

பாகிஸ்தான் விமான விபத்து

விமானம் தரையிறங்கும்போது இயந்திரத்தில் கோளாறு ஏற்பட்டதாகவும் முதல்முறை தரையிறங்க முயன்று அது முடியாமல் போகவே விமானம் வட்டமடித்துள்ளது. பின்னர் இரண்டாவது முறையாகத் தரையிறங்கும் நேரத்தில்தான் விபத்தைச் சந்தித்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். விமானம் விபத்துக்குள்ளாவதற்கு முன்னதாக விமானியும், கட்டுப்பாட்டு அறையில் இருக்கும் அதிகாரியும் பேசிக்கொள்ளும் ஆடியோவை பாகிஸ்தான் ஊடகங்கள் வெளியிட்டுள்ளன.

அதில் விமானி `இயந்திரங்கள் செயல்படவில்லை’ எனக் கூறுகிறார், அதற்கு அதிகாரி, `பெல்லி லேண்டிங் முறையில் தரையிறக்கப் போகிறீர்களா?’ எனக் கேட்கிறார், இதற்கு பைலட், `மே டே, மே டே, மே டே’ (Mayday) என்று கூறுவதோடு ஆடியோ முடிகிறது. விபத்துக்குள்ளான விமானத்தில் கறுப்பு பெட்டியை ஆய்வு செய்தால் மட்டுமே விபத்துக்கான முழுமையான காரணம் தெரியவரும் என்று கூறப்படுகிறது.